ஒரு இரயில் நிலையத்திலிருந்து இரண்டு தொடர் வண்டிகள் ஒரே நேரத்தில் புறப்படுகின்றன. முதல் வண்டி மேற்கு திசையை நோக்கியும். இரண்டாம் வண்டி வடக்கு திசையை நோக்கியும் பயணம் செய்கின்றன. முதல் வண்டியானது இரண்டாவது வண்டியை விட மணிக்கு 5 கி.மீ அதிக வேகத்தில் செல்கிறது. இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அவற்றிற்கு இடையேயுள்ள தொலைவு 50 கி.மீ எனில், ஒவ்வொரு வண்டியின் சராசரி வேகத்தினைக் காண்க.