இலேசான மழை என்பது மணிக்கு 0.5 மி. மீ குறைந்தது இருக்கும். அதுவே மித மழை என்பது 0.5 மி. மீ இல் இருந்து 4 மி. மீ அளவுக்குள் இருக்கும். மணிக்கு 4 மி. மீ அளவை விட அதிகமான அளவு மழை பெய்தால் அதுவே கன மழை எனப்படும். இப்படியாக மழை அளவு மில்லி மீட்டரில் கணக்கெடுக்கப்படும். இதற்கென மழை மானி அந்தந்த அரசு அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டு இருக்கும். அத்துடன் நாள் தோறும் 8:30 மணி அளவில் மழை அளவைக் கணக்கிட வேண்டும்.